Posts

Showing posts from June, 2020

ஒரு நிமிட மாற்றம்

Image
         அத்தியாயம் - 1 எமலோகத்தில் இருந்து எம தூதுவர்கள் அவளை அழைத்து செல்ல வந்து கொண்டு இருந்தார்கள் அவள் அப்போது தன்னுடைய உயிரற்ற உடலை பார்த்து கொண்டிருந்தாள்.  எம தூதுவர்கள் அவளை எமலோகம் கூட்டி செல்ல அவள் தனக்கு என்ன நடந்தது ஏன் தற்கொலை செய்து கொண்டோம் என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தாள்.  தூதுவர்கள் அவளை எமதர்மனின் முன் அழைத்து செல்ல அங்கே அவள் அந்த இடத்தில் அனைவரும் எவ்வித பாகுபாடு இன்றி ஒன்று போல இருந்தனர். எம தர்மன் கூட அவ்வாறே இருந்தார் சிறு வித்தியாசத்துடன் கையில் பாசக்கயிற்றை ஏந்தி கொண்டிருந்தார். இறந்தவர்கள் அனைவரும் மூன்று வரிசையில் நிற்க வைக்கபட்டிருந்தனர். ஏன் இவர்கள் தனிதனியாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேக்க தூதுவன் பதில் அளித்தான். முதல் வரிசையில் நிற்பவர்கள் இயற்கையாக மரணித்தவர்கள் இரண்டாம் வரிசை விபத்து மற்றும் உடல் உபாதைகளால் மரணித்தவர்கள்  மூன்றவது தற்கொலை செய்து கொண்டவர்கள்  நீங்கள் இந்த வரிசையில் செல்லுங்கள் என்று மூன்றாவது வரிசையை கட்டினான் தூதுவன். அவள் அவ்வரிசையிலே சென்றால். முதலில் இயற்கையாக மரணித்தவர...