ஒரு நிமிட மாற்றம்
அத்தியாயம் - 1
எமலோகத்தில் இருந்து எம தூதுவர்கள் அவளை அழைத்து செல்ல வந்து கொண்டு இருந்தார்கள் அவள் அப்போது தன்னுடைய உயிரற்ற உடலை பார்த்து கொண்டிருந்தாள்.
எம தூதுவர்கள் அவளை எமலோகம் கூட்டி செல்ல அவள் தனக்கு என்ன நடந்தது ஏன் தற்கொலை செய்து கொண்டோம் என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தாள்.
தூதுவர்கள் அவளை எமதர்மனின் முன் அழைத்து செல்ல அங்கே அவள் அந்த இடத்தில் அனைவரும் எவ்வித பாகுபாடு இன்றி ஒன்று போல இருந்தனர். எம தர்மன் கூட அவ்வாறே இருந்தார் சிறு வித்தியாசத்துடன் கையில் பாசக்கயிற்றை ஏந்தி கொண்டிருந்தார்.
இறந்தவர்கள் அனைவரும் மூன்று வரிசையில் நிற்க வைக்கபட்டிருந்தனர். ஏன் இவர்கள் தனிதனியாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேக்க தூதுவன் பதில் அளித்தான். முதல் வரிசையில் நிற்பவர்கள் இயற்கையாக மரணித்தவர்கள் இரண்டாம் வரிசை விபத்து மற்றும் உடல் உபாதைகளால் மரணித்தவர்கள் மூன்றவது தற்கொலை செய்து கொண்டவர்கள்
நீங்கள் இந்த வரிசையில் செல்லுங்கள் என்று மூன்றாவது வரிசையை கட்டினான் தூதுவன். அவள் அவ்வரிசையிலே சென்றால். முதலில் இயற்கையாக மரணித்தவர்களும் விபத்தில் மரணித்தவர்களும் தங்களுடைய பாவ புண்ணிய கணக்குகளை பார்த்து சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பபட்டனர்.
இறுதியாக தற்கொலை செய்து கொண்ட இவளை அழைக்க அவள் எமதர்மன் முன் சென்று நின்றாள். பெண்ணே நீ எதற்காக தற்கொலை செய்து கொண்டாய் என்று கேக்க அவள் ஏதும் தெரியாமல் வாய் மூடி யோசித்து நின்றாள். அவர் மீண்டும் கேக்க அவள் தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை என்ன பதிலுரைத்தாள்.
உடனே எமன் பதில் தந்தார் உனக்கு அது இப்போது நினைவுக்கு வராதம்மா.
அத்தியாயம் - 2
அவள் பெயர் இனியா அவளும் மிக இனிமையானவள் மிகவும் அழகானவள் கூட . பார்ப்பவர்கள் கண் இமைக்காமல் பார்க்கும் அழகு முகம். பெரிய கண்கள் கூர்மையான மூக்கு சிறு செவ்விதழ்கள். அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மென்ட் CA படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அவள் லட்சியம் கூட.
வகுப்பில் அவள் தான் எப்போதும் முதல் மாணவி அவளுக்கு விளையாட்டிலும் மிகவும் விருப்பம். அந்த பள்ளியில் அவளை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. அனைவரிடமும் அன்பாக பேசுவாள். மிகவும் தைரியமானவள். தவறு என்றால் பெரியவர்கள் ஆனாலும் எதிர்த்து நிற்ப்பாள்.
அவளுள் ஒரு காதலும் உண்டு அவன் பெயர் இன்பா. ஆண்மைக்கு உரிய அணைத்து தகுதிகளுடன் பார்க்கும் பெண்கள் அனைவரும் காதல் கொள்ளும் வசீகர முகம். அவன் கல்லூரி இரண்டாம் ஆண்டு BBA படித்து கொண்டிருந்தான். இருவரும் ஒரே ஊர் மற்றும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஓராண்டு பின்னால் சுற்றி இரண்டு ஆண்டுகளாக காதல் வயப்பப்பட்டவர்கள்.
அவள் வீட்டில் தாய் தந்தை மற்றும் அவள் தம்பியுடன் வாழ்ந்து வந்தாள். வீட்டில் அனைவருக்கும் செல்லம் அவள் தம்பிக்கும் நல்லா அக்கா மற்றும் வழி நடத்துபவள்.
ஒரு நாள் அவள் பள்ளி சென்று கொண்டிருக்கும் போது கூட படிக்கும் சில மாணவர்கள் மாணவிகளை கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசிக்கொண்டிருந்தார்கள். அதை கண்ட அவள் அவர்களில் ஒருவனின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். பின் அவர்கள் மீது பள்ளியிலும் புகார் அளித்தாள். அவர்களை பள்ளியில் இருந்து இடைநிறுத்தம் செய்தது பள்ளி நிர்வாகம்.
அத்தியாயம் - 3
ஏன் எனக்கு ஏதும் நியாபகம் இல்லை பின் எப்போது நியாபகம் வரும் என கவலையாக கேட்டாள். எம தர்மன் உடனே நீ பாவம் செய்தவள். தற்கொலை செய்து கொள்வது பாவ காரியம் ஆகும். உன்னுடைய நியாபகங்கள் அனைத்தும் உன்னுடைய ஆயுள் காலம் இந்த பூமியில் முடிந்த பிறகே நியாபகம் வரும் அதுவரை நீ ஆன்மாவாக அருவமாய் சுற்றி கொண்டிருப்பாய்.
நீ உன் வாழ்நாளை முடித்து கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாய் என்று நீயே அதை பார்த்து தெரிந்துகொள் என்று எதிரே இருந்த கண்ணாடியை காண்பித்தார். அதன் முன்பு சென்று நின்றாள் தான் இழந்த எதிர்காலத்தை பார்க்க...
அதில் அவள் விரும்பிய CA படித்து முடித்து சார்ட்டடு அக்கௌன்ட்டண்ட் ஆக இருந்தால் அவள் காதலித்த இன்பா வையே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளை போலாம் வாழ வேண்டும் என்று அந்த ஊரே ஆசை படும் அளவிற்கு இருந்தது அவளுடைய இனிமையான வாழ்வு.
அய்யோ என்று அவள் கதறி அழ எமன் ஏன் பெண்ணே அழுகிறாய் நீ எடுத்த முடிவு தானே இது பிறகென்ன... ஏன் எனக்கு இப்படி ஒரு தண்டனை எதோ சோகம் என் வாழ்வில் நடந்தது என்று நான் இந்த முடிவை எடுத்திருபேன். ஆனால் அதை தாண்டி இது அதிகமான வேதனை அளிக்கிறது.
நீ உன் முடிவை எடுத்த ஒரு நிமிடத்தில் உன் தைரியத்தால் அதை மாற்றி கொண்டிருந்தால் உனக்கு இந்த வேதனை வந்திருக்காது... எமன் கூறினார்.
அவள் தொடர்ந்து வாதிட்டால் இது இறைவன் படைத்த உலகம் தானே ஏன் அந்த ஒரு நிமிடம் என் முடிவை மாற்றும் தைரியம் அந்த கடவுள் எனக்கு கொடுக்கவில்லை. இது இறைவன் படைத்த உலகம் தான் ஆனால் அவர் படைத்த உலகம் மிகவும் அமைதியானது அழகானது... மனிதன் தன் அறிவை பயன்படுத்தி மேம்படுத்திய உலகம் சுயநலம் மட்டும் நிறைந்த உலகம் இது விதியின் விளையாட்டும் சேர்ந்து கொண்டது.
சிங்கத்தையும் புலியையும் நேரில் எதிர் கொள்ளும் மனிதர்கள் கூட தன்னுடைய சிறு பிழையை தங்கி கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறார்கள்... அதற்கு அவர்கள் பெரும் தண்டனை தன்னை பற்றிய விபரங்கள் அனைத்தும் மறந்து அவர்கள் ஆயுள் காலம் முடியும் வரை ஆன்மாவாக சுற்றி திரிவது...
மனிதர்கள் பலர் பேரும் தைரியசாலியாக இருந்தாலும் அவர்கள் எடுக்கும் ஒரு நிமிட முடிவு அவர்களை உன்னை போல் மாற்றி விடுகிறது இதில் இறைவன் தவறு ஏது இல்லை என் தவறு தான் ஏது... உன்னுடைய கோழைத் தனத்துக்கு உனக்கான தண்டனை இது. உன் ஆயுள் காலம் முடியும் வரை அருவமாய் இந்த பூமியை சுற்றி வருவது...
அத்தியாயம் - 4
இனியா வின் தந்தை அவளை காணவில்லை என்று ஊர் முழுதும் தேடி இரவு வெகு நேரம் ஆனதால் போலீசில் புகார் கொடுத்தார். இன்பா வும் அவளை இரவு முழுவதும் தேடி அலைந்து கொண்டிருந்தான். அவள் வரும் வழியை எதிர் நோக்கி அவள் குடும்பத்தினர் அனைவரும் காத்திருந்தனர் அழுது கொண்டே....
மறுநாள் காலையில் இனியா வாழை தோப்பில் மயங்கி கிடக்க அங்கே வேலை செய்ய வந்தவர்கள் அவளை கண்டு பதறி தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்தனர் பின் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தனர். செய்தியை கேட்டு இனியா வின் பெற்றோரும் இன்பா வும் அங்கு சென்று சேர்ந்தனர்.
மகளின் நிலையை கண்ட பெற்றவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். மருத்துவர்கள் அவளை யாரோ சிலர் கொடுமை செய்து பலாத்காரம் செய்ததாக கூறினார். அவள் மயக்கத்தில் இருந்து எழுந்தாள் மிகவும் திடமாக இருந்தாள். என்ன நடந்தது என்று கூற ஆரம்பித்தாள்.
அவளால் அவமானப்படுத்த பட்ட அந்த மாணவர்கள் மாலை அவள் பழகி முடித்து வீடு திரும்பும் வழியில் அவை மறித்து கடத்தி சென்றனர். இரவு முழுவதும் அவளை மிகவும் சித்ரவதை செய்து கற்பழித்தார்கள். அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் மீது புகார் கொடுத்தாள். அதன் பேரில் அவர்கள் கைது செய்யபட்டனர்.
மூன்று மாதங்கள் பிறகு வழக்கு நடந்து கொண்டிருந்தது. தனக்கு நடந்த அனைத்தும் மறந்து கொண்டிருந்தாள் அவள் குடும்பமும் இன்பா வும் அவளுக்கு உறுதுணையாக இருந்தனர். அதனால் அவள் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு கொண்டிருந்தாள். திரும்பவும் பள்ளி செல்ல ஆரம்பித்தாள்.
முதல் நாள் பள்ளி சென்ற போது செல்லும் வழியில் அனைவரும் அவளை பாவமாக பார்க்க அவளுக்கு நடந்ததை பற்றி பேச அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பள்ளிக்கு சென்றால் அங்கும் அனைவரும் இவள் பின்னால் அவ்வாறே பேச பள்ளியில் இருந்து ஓடி வீட்டிற்கு சென்றாள் அழுது கொண்டே இருக்க அவள் பெற்றோர் அவளை சமாதானம் செய்தனர் அவர்களால் முடியவில்லை.
மாலை இன்பா வும் வந்து எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவளால் அதை ஏற்க முடியவில்லை. கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் தேறி விடுவாள் என அவர்கள் அவளை தனியே விட்டனர் அவள் அம்மா இரவு சாப்பிட அழைத்தும் அவள் வரவில்லை. அனைவரும் சாப்பிடாமல் போய் படுத்தனர் அனைவரும் உறங்கிய பிறகு அவள் தன்னை அழித்து கொள்ள முடிவு செய்தாள். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். அவள் துடித்த நிமிடங்கள் அவளுக்கு வாழ வேண்டும் என்று ஆசை ஏற்படுத்தின ஆனால் அவளால் தன்னை காத்து கொள்ள முடியாமல் இறந்து போனாள்.
அவளை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் வெளியே தங்கள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர் மிகவும் ஆனந்தமாக பிற பெண்களின் வாழ்க்கை நாசமாக்கி கொண்டே....

Comments
Post a Comment